13 நாட்களேயான சிசு பரிதாப மரணம்

keerthi
0


 பிறந்து 13 நாட்களேயான பெண்குழந்தை பால்புரைக்கேறியதில் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது.

மட்டக்களப்பு இருதயபுரம் பகுதியில் பால் கடந்த திங்கட்கிழமை (22) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

குழந்தைக்கு மாலை வேளை, தாயார் பால் கொடுத்த போது பால் புரைக்கேறியநிலையில் உயிரிழந்துள்ளது.

இதனையடுத்து குழந்தையின் தாயாரிடம் மேற்கொண்ட விசாரணையில்,அவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டிருப்பதை கண்டறிந்து அவரை வைத்தியசாலையில் அனுமதித்ததுடன், குழந்தையின் சடலத்தை வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக காவல்துறையினர் ஒப்படைத்தனர்.

இந்த நிலையில் குழந்தை பால் புரைக்கேறி உயிரிழந்துள்ளதாக சட்ட வைத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் சடலத்தை உறவினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top