யுக்திய விசேட நடவடிக்கையின்போது 14 நாட்களில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் சந்தைப் பெறுமதி சுமார் 85 கோடி ரூபா என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 55 கோடி ரூபாவுக்கும் அதிகமான சொத்துக்கள் முடக்கப்பட்டதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு நேற்று (31) தெரிவித்துள்ளது.
இதேவேளை, குறித்த காலப்பகுதியில் போதைப்பொருள் தொடர்பான தகவல்களை வழங்குவதற்காக பொதுமக்கள் பொலிஸ் மற்றும் பாதுகாப்பு திணைக்களங்களுக்கு 10,798 தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.யுக்திய விசேட நடவடிக்கையினால் கைப்பற்றப்பட்ட மொத்த போதைப்பொருளின் சந்தைப் பெறுமதி 858 மில்லியன் ரூபாவாகும். போதைப்பொருள் கடத்தல்காரர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களின் பெறுமதி 558.5 மில்லியனாகும் இதுபற்றி தகவல் வழங்க
10798 தொலைபேசி அழைப்புக்கள் வந்துள்ளதாகவும் அமைச்சின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
“யுக்திய” நடவடிக்கையின் கீழ் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் போது கைப்பற்றப்பட்ட போதை பொருட்களின் விபரம்.
ஹெரோயின் 11 கிலோ 600 கிராம்
ஐஸ் 08 கிலோ 378 கிராம்
கஞ்சா 297 கிலோ 8 கிராம்
2,110,500 கஞ்சா செடிகள்
மாவா 119 கிலோ 600 கிராம்
ஏஸ் 35 கிலோ 800 கிராம்
ஹஷிஷ் 01 கிலோ 70 கிராம்
தூள் 03 கிலோ 700 கிராம்
குஷ் 555 கிராம்
72,272 மாத்திரைகள்
இந்த நடவடிக்கைகளில் மொத்தம் 20797 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களில் 1018 சந்தேகநபர்கள் தடுப்புக்காவல் உத்தரவின் அடிப்படையில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அத்துடன், சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பில் 189 சந்தேகநபர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். 1298 போதைக்கு அடிமையானவர்கள் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பப்படவுள்ளனர்.
அத்துடன், பதிவு செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பட்டியலில் இருந்த 4584 சந்தேக நபர்களில் 1625 சந்தேக நபர்களை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகம் மற்றும் விசேட பணியகம் இணைந்து கைது செய்துள்ளது.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மொத்த சந்தை மதிப்பு 858 மில்லியனுக்கும் அதிகமாகும் என தெரியவந்துள்ளது.
மேலும், இந்த நடவடிக்கையுடன் இணைந்து, நாடளாவிய ரீதியில் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு சொந்தமான வாகனங்கள் மற்றும் வீடுகள் உள்ளிட்ட சொத்துக்களின் மொத்த சந்தை பெறுமதி 558.5 மில்லியனுக்கும் அதிகமாகும் என தெரியவந்துள்ளது.