மலேசியாவின் 17-வது மன்னராக சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கந்தர் பதவியேற்றார்.
மலேசியா நாட்டின் அதிகாரப்பூர்வமாக பிரதமர் இருந்தாலும், அங்கு இன்னும் மன்னர் அதிகாரம் நீடித்து வருகிறது. இந்நிலையில், தற்போது சுல்தான் இப்ராஹிம் இஸ்கந்தர் மலேசியாவின் 17வது மன்னராக பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார்.இந்நிலையில், இவரும் இவரது குடும்பமும் சிங்கப்பூரில் தொலைத்தொடர்பு உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் முதலீடுகளை கொண்டிருக்கிறது. இதன் மதிப்பு ரூ.47 ஆயிரம் கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.மலாய்-பிரிட்டிஷ் வம்சாவளியைச் சேர்ந்த சுல்தான் இப்ராஹிம், மலேசியாவில் தனியார் இராணுவம் ஒன்றையும் வழிநடத்துகிறார்.
இந்தநிலையில், தான் பதவியேற்றுக்கொண்டது குறித்து கூறிய அவர், "நான் அரசாங்கத்தை ஆதரிப்பேன், ஆனால் அவர்கள் தவறாக ஏதாவது செய்கிறார்கள் என்று நினைத்தால் அது குறித்து எச்சரிப்பேன்" என்று கூறியுள்ளார். சமீபத்திய ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தலில் பெறும்பான்மை இல்லாத பாராளுமன்றம் அமைந்தது. எனவே புதிய பிரதமரை தேர்ந்தெடுக்க மன்னரின் தலையீடு தேவைப்பட்டது. என தெரிவித்துள்ளார்.