2024 ஜனவரி மாதம் முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் பதிவு இலக்கமான
TIN இலக்கத்தினை பெற்றுக்கொள்ள வேண்டும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.
ஜனவரி முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில் வரி செலுத்துவோருக்கான பதிவு இலக்கத்தை (TIN) பெறாத நபர்களுக்கு 50,000 வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அனைவருக்கும் தேசிய அடையாள அட்டை இலக்கமொன்று இருப்பதை போலவே TIN இலக்கம் இருக்க வேண்டியதும் அவசியமாகும்.
வரி செலுத்தக்கூடிய அளவிலான வருமானம் இருக்குமாயின் அவர்கள் வரி செலுத்த வேண்டும்.
அதற்காக அவர்களுக்கான வரிக் கோப்பும் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஒரு வருடத்தில் (ஏப்ரல் 2024 - மார்ச் 2025 ) 1,200,000 ரூபாய்க்கு மேல் வருமானம் பெறும் நபர்கள் வருமான வரிக் கோப்பை திறக்க வேண்டும்.
இதனை, பொது மக்கள் www.ird.gov.lk என்ற இணையத்தில் பதிவு செய்யலாம், தபால் மூலம் பதிவு செய்யலாம் அல்லது இலங்கை உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் நேரில் பதிவு செய்யலாம்.