`மெரி கிறிஸ்துமஸ்' பட விழாவில் கலந்துகொண்ட கத்ரீனா கைஃப் வரும் காலங்களில் நெகட்டிவ் கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புஇப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றிருந்தது. இதில் கத்ரீனா கைஃப்பின் நடிப்பைப் பலரும் பாராட்டி இருந்தனர். இந்நிலையில் `மெரி கிறிஸ்துமஸ்' பட விழாவில் கலந்துகொண்ட கத்ரீனா கைஃப், வரும் காலங்களில் நெகட்டிவ் கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புவதாகத் தெரிவித்திருக்கிறார்.இதுகுறித்து பேசிய கத்ரீனா கைஃப், “வரும் காலங்களில் நெகட்டிவ் கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புகிறேன். நீங்கள் 20 வயதில் இருந்ததுபோல் உங்களின் 30 வயதில் இருக்கப்போவதில்லை. சில அனுபவங்களுடன் நீங்கள் முன்னேறி இருப்பீர்கள். அதுபோலத்தான் வேலையும்! வயது அதிகரிக்கும்போது இயல்பாக உங்களின் விருப்பங்களும் மாறுபடும்.
அனைத்து விதமான கதாபாத்திரங்களிலும் நடிக்க வேண்டும் என நினைக்கின்றேன். குறிப்பாக நெகட்டிவ் கதாபாத்திரங்களிலும் பீரியட் படங்களிலும் நடிக்க ஆசைப்படுகிறேன். இதுதொடர்பாக நல்ல கதைகள் வந்தால் நிச்சயமாக நடிப்பேன்” என்றார்.மேலும் இப்படத்தின் இயக்குநர் குறித்துப் பேசிய அவர், "ஸ்ரீராம் ராகவனின் தீவிர ரசிகை நான். 'மெரி கிறிஸ்துமஸ்' படத்தில் அவரோடு இணைந்து பணியாற்றியது எனக்கு மிகுந்த சந்தோஷத்தைக் கொடுத்தது" என்று தெரிவித்திருக்கிறார்.