20 அடி உயரமான திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர்..!!

tubetamil
0

 இந்தியாவின் கோயம்புத்தூரில் தமிழ் எழுத்துக்களால் உருவாக்கப்பட்ட 20 அடி உயரம் கொண்ட திருவள்ளுவர் சிலையை தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைக்காணொளி தொழில்நுட்பத்தின் மூலம் இன்று திறந்து வைக்கவுள்ளார்.


தமிழ் எழுத்துகளைக் கொண்டு சுமார் 2.5 டன் எடை கொண்டதாகவும் 20 அடி உயரம் கொண்டதாகவும் குறித்த திருவள்ளுவர் சிலை உருவாக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சிலையின் முன்பு திருக்குறளின் முதற்குரலான 'அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு' என்ற குரல் பொறிக்கப்பட்டுள்ளது.

விசேடமாக, இந்த சிலை முழுவதுமாக தமிழ் எழுத்துக்களால் அமைக்கப்பட்டு நெற்றியில் அறம் என்ற சொல் பொறிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் கோவை மாவட்டத்தின் பொள்ளாச்சி வீதியின் குறிச்சிக்குளம் பகுதியில் இந்த திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.


மாலை வேளைகளில் மின் விளக்குகளால் ஔிரும் வகையில் இச்சிலை வடிவமைக்கப்பட்டுள்ளதுடன் சிலை முழுவதும் உருக்கு இரும்பினால் (Steel) உருவாக்கப்பட்டுள்ளது.

52 கோடி இந்திய ரூபாய் செலவில் உருவாக்கப்படும் 'Smart City' திட்டத்தின் கீழ் இந்த சிலை உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top