இன்று (27) அதிகாலையுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் யுக்திய நடவடிக்கையின் கீழ் 818 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் ஒருவர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலும் 08 பேர் புனர்வாழ்வுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன்,159 கிராம் ஹெரோயின், 112 கிராம் ஐஸ் மற்றும் 329 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது.