வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் எதிர்வரும் புதன்கிழமை (24) நடைபெறவுள்ளது.
பிரதிஷ்டா கிரியைகள் நேற்று புதன்கிழமை (17) ஆரம்பமாகியதுடன், தொடர்ந்து வரும் நாட்களில் கிரியைகள் நடைபெற்று, எதிர்வரும் திங்கட்கிழமை (22) காலை 7.00 மணி முதல் மறுநாள் செவ்வாய்க்கிழமை (23) மாலை 5.00 மணிவரை எண்ணெய்க் காப்பு சாத்துதல் நடைபெறவுள்ளதாக, ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து எதிர்வரும் 24ஆம் திகதி காலை 9.38 மணி முதல் முற்பகல் 11.20 மணிவரையான சுபவேளையில் மகா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளதென ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.