முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் வெளியிடப்பட்ட இரண்டு விசேட வர்த்தமானிகளை தற்போதைய விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ ரத்து செய்துள்ளார்.
இதன்படி, 2023 ஆம் ஆண்டு ஜூலை 28 ஆம் திகதி வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி இலக்கமான 2342/48 இரத்துச் செய்யப்படவுள்ளது
.
அத்துடன், இலங்கை கராத்தே சம்மேளனம் மற்றும் இலங்கை மோட்டார் விளையாட்டு சங்கத்தின் இடைக்கால குழுக்கள், அதிகாரங்கள், பணிகள் மற்றும் கடமைகளை கலைத்த வர்த்தமானி அறிவித்தலும் இரத்து செய்யப்பட்டுள்ளது.தேசிய விளையாட்டு சங்கங்கள் அல்லது சம்மேளனங்களின் அரசியலமைப்பின் பிரகாரம், முன்னைய தேர்தல்களில் தெரிவுசெய்யப்பட்ட அதிகாரிகள், அவர்களின் சட்டப்பூர்வ பதவிக்காலம் முடிந்து புதிய தேர்தல் நடத்தப்படும் வரையில், சபைக்கு முன்பாக நியமிக்கப்படலாம் என அமைச்சர் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.