விவசாய தோட்டத்தில்
பயிரிடப்பட்டிருந்த இலீக்சில், சுமார் 300 கிலோ கிராம் இலீக்சை திருடிச்சென்று விற்பனைச் செய்தனர் என்றக் குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டனர்.
இந்த சம்பவம் மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சாமிமலை ஹோல்டன் தோட்டத்தில் சனிக்கிழமை (06) இடம்பெற்றுள்ளது.
விவசாய தோட்டத்தின் உரிமையாள செய்த முறைப்பாட்டை அடுத்து களவாடிய இலீக்சை நோர்வூட் நகரில் விற்பனை செய்தனர் என்றக் குற்றச்சாட்டின் கீழ் இருவரை மஸ்கெலியா பொலிஸார் கைது செய்துள்ளனர் என மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவித்தார்.
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இருவரும், ஹட்டன் நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் விநாயகமூர்த்தி முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்ட போது அவர்களை எதிர்வரும் 10 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.