42 ஆயிரம் பேரை கைது செய்யுமாறு உத்தரவு

keerthi
0

 


இலங்கையில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட 42,248 பேரின் பெயர் பட்டியல் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் மற்றும் குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

யுக்திய நடவடிக்கையின் கீழ் அவர்களை கைது செய்யுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

 அத்தோடு    இந்த 3 பட்டியலுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை அடுத்த ஒரு மாத காலத்திற்குள் சட்டத்தின் முன் நிறுத்த அனைத்து குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகளையும் 24 மணி நேரமும் பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்றும் பதில் பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

சந்தேகநபர்களில், 35,505 பேர் பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்களும் , இதுவரை கைது செய்யப்படாத 4,258 சந்தேகநபர்களும், குற்றங்களுக்காக தேடப்படும் 807 (2022 இல்) மற்றும் 1,678 (2023 இல்) சந்தேகநபர்களாக 2,485 பேர் அடங்கியுள்ளனர்.

நாளை (14) முதல் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களும் யுக்திய நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட வேண்டுமென பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் இன்று பணிப்புரை விடுத்துள்ளார்.



Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top