சதொச ஊடாக விற்பனை செய்யப்படும் இறக்குமதி செய்யப்பட்ட இந்திய முட்டை ஒன்றின் விலை இன்று முதல் 43 ரூபாவாக அதிகரிக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
வற் வரி அதிகரிப்பால் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகளை 35 ரூபாவுக்கு விற்க முடியாததால் சதொச விற்பனை நிலையங்கள் முட்டை விற்பனைக்கு கட்டுப்பாடு விதித்துள்ளன. அதன்படி சதொசவில் முட்டை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இவ்வாறான சூழலில், சந்தையில் நாட்டு முட்டையின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது என அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.