ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 48 ஆக உயர்ந்துள்ளது.
ஜப்பானின் மத்தியப் பகுதியில் அந்த நாட்டு நேரப்படி நேற்று மாலை 4 மணியளவில் 7.6 மெக்னிடியூட் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதனையடுத்து, சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தது.
நிலநடுக்கத்தினால் ஏற்பட்டுள்ள இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்டெடுப்பதற்கு மீட்புக்குழுவைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நிலநடுக்கம் மற்றும் சுனாமி எச்சரிக்கை காரணமாக வீட்டை விட்டு வெளியேறியுள்ளவர்களுக்கு தேவையான உணவு, தண்ணீர் மற்றும் போர்வைகள் உள்ளிட்ட பொருட்களை ஜப்பானிய இராணுவம் வழங்கி வருகிறது.
நிலநடுக்கத்தையடுத்து ஜப்பான் கடற்பகுதிக்கு விடுக்கப்பட்டிருந்த, அனைத்து சுனாமி எச்சரிக்கைகளும் நீக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்க தமது நாடு தயாராக உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்