கிளிநொச்சியில் நான்கு கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி விசேட அதிரடிப் படை அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் வாகனத்தைச் சோதனையிட்ட அதிரடிப் படையினர் வானத்துக்குள் இருந்த நான்கு கிலோகிராம் கேரள கஞ்சா பார்சலை கைப்பற்றியுள்ளனர்.
அத்துடன், அவர்கள் சந்தேகத்தில் ஒருவரையும் கைது செய்து கிளிநொச்சி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.