பல்கலைக்கழகத்தில் மாணவிகளை துன்புறுத்திய 6 மாணவர்களுக்கு நேர்ந்த கதி..!

keerthi
0




சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவிகளை பகிடிவதை செய்த குற்றச்சாட்டில் 6 மாணவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 நேற்று கைது செய்யப்பட்ட 23, 24 மற்றும் 25 வயதுடைய 6 மாணவர்களும் அதே பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞான மற்றும் மொழிக் கல்வி பீடத்தில் இறுதி ஆண்டில் கல்வி கற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 அத்தோடு    கடந்த 14ஆம் திகதி 1997 என்ற தொலைபேசி இலக்கத்தின் மூலம் கிடைத்த முறைப்பாட்டிற்கமைய, மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் இந்த மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சமனலவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top