மாலியில் தங்க சுரங்கம் இடிந்து விழுந்து 70 பேர் பலி

keerthi
0



மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் தங்க சுரங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. அந்த நாட்டில் தென்மேற்கில் கங்காபா மாவட்டத்தில் உள்ள தங்க சுரங்கத்தில் ஏராளமான தொழிலாளர்கள் வேலை பார்த்து வந்தனர்.

திடீரென தங்க சுரங்கம் இடிந்து விழுந்தது. இதில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் மண்ணில் புதைந்து சிக்கி கொண்டனர். அத்தோடு        உடனே மீட்பு படையினர் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

 மேலும்  இந்த விபத்தில் 70-க்கும் மேற்பட்டோர் உயிரிந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சுரங்கத்தில் மேலும் பலர் சிக்கியுள்ளதாகவும், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் அஞ்சப்படுகிறது.

விபத்துக்கான காரணம் குறித்து உடனடியாக தெரியவில்லை. எனினும்   இது குறித்து தேசிய புவியியல் மற்றும் சுரங்க இயக்குநரகத்தின் மூத்த அதிகாரியான கரீம் பெர்தே கூறும்போது, இந்த விபத்து ஆழ்ந்த வருத்தம் அளிக்கிறது. எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்துகளைத் தவிர்க்க இந்த கைவினைஞர் சுரங்கத்துறையை அரசு ஒழுங்குப்படுத்தும் என்றார்.

ஆப்பிரிக்காவின் மூன்றாவது பெரிய தங்க உற்பத்தியாளரான மாலியில் சுரங்க பணிகளில் ஈடுபடும் சிறிய தொழிலாளர்கள் மற்றும் முறை சாரா தொழிலாளர்கள் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவது கிடையாது என்று சொல்லப்படுகின்றது.



Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top