கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவில் பங்கேற்க தமிழக பக்தர்கள் விண்ணப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா அடுத்த மாதம் 23, 24 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.
இலங்கையில் இருந்து 4 ஆயிரம் பேரும் தமிழகத்தில் இருந்து 4 ஆயிரம் பேரும் என மொத்தம் 8 ஆயிரம் பேர் இம்முறை திருவிழாவில் கலந்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கச்சதீவு திருவிழாவிற்கு செல்லும் பக்தர்களுக்கான விண்ணப்பப் படிவத்தை நேற்று முதல் பெப்ரவரி 6 ஆம் திகதி வரை வழங்க முடியும் என என ராமேஸ்வரம் புனித சூசையப்பர் தேவாலயத்தின் பங்குத்தந்தை சந்தியாகு அறிவித்துள்ளார் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன