8 ஏக்கர் காணியை மீள கையளிப்போம்..!!

tubetamil
0

 நாட்டின் தற்கால மற்றும் எதிர்கால பாதுகாப்பை கருத்திற்கொண்டு பல பிரதேசங்களில் இராணுவ முகாம்கள் அமைக்கப்பாட்டுள்ளதாகவும், இந்நிலையில் வடக்கு, கிழக்கில் மாத்திரம் இராணுவ முகாம்கள் இருப்பதாக முன்வைக்கப்படும் கருத்துக்களை நிராகரிப்பதாகவும் பாதுகாப்பு இராஜாங்க


அமைச்சர் பிரேமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில்  புதன்கிழமை (24)  வாய்மூல விடைக்கான கேள்விநேரத்தின் போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இரா.சாணக்கியன் எம்.பியினால் மட்டக்களப்பு குருக்கள்மடம் கலைவாணி மகாவித்தியாலயத்தின் மைதானம் இராணுவத்தினர் வசமிருப்பதாக தெரிவித்து எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் இவ்வாறு கூறினார்.

அதன்போது இராஜாங்க அமைச்சர் மேலும் கூறுகையில்,

இராணுவ முகாம்கள் வடக்கு, கிழக்கில் மாத்திரம் இல்லை. அனைத்து மாகாணங்களிலும் நாட்டின் தற்போதைய மற்றும் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு முகாம்களை வைத்திருக்கின்றோம். இதனால் வடக்கு, கிழக்கில் மாத்திரம் இராணுவ முகாம்கள் இருப்பதாக சாணக்கியன் முன்வைக்கும் கருத்தை நிராகரிக்க வேண்டியுள்ளது.

இதேவேளை என்னிடமுள்ள தகவல்களுக்கமைய குருக்கள்மடம் பாடசாலை சுனாமி அனர்த்தத்தின் பின்னரே வேறு இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அதன்பின்னர் இராணுவ படைப் பிரிவொன்றின் தலைமையகம் இந்த இடத்திலேயே அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முகாமுக்கு வெளியிலேயே குறித்த மைதானம் உள்ளது. அதற்கு அருகில் இரண்டு ஏக்கர் அளவிலான இராணுவ முகமொன்றே உள்ளது.

கிழக்கில் இதற்கு முன்னர் 44,980 ஏக்கர் இராணுவத்தினர் வசமிருந்தது. இதில் 90 சத வீதத்திற்கும் அதிகமான காணிகள் மக்களிடம் மீள்குடியேற்றத்திற்காக கையளிக்கப்பட்டுள்ளது. தற்போது இராணுவத்தினரிடம் 7379 ஏக்கர் காணிகளே உள்ளது. இவற்றில் 37.8 ஏக்கர் மட்டுமே தனியார் காணிகளாக உள்ளன. 7342 ஏக்கர் அரச காணிகளாகும். தனியார் காணியில் 8 ஏக்கர் காணியை இந்த வருடத்தில் மீள கையளிப்போம். இதில் இனவாதத்தை இணைக்க வேண்டாம் என்று கோருகின்றேன் என்றார். 

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top