ஏஐ தொழில் நுட்பம் மூலமாக மறைந்த பாடகர்களின் குரல்களுக்கு ஏ.ஆ.ரஹ்மான் உயிர்கொடுத்துள்ளார்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஷ்ணு விஷால், விக்ராந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் லால் சலாம்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஷ்ணு விஷால், விக்ராந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் லால் சலாம்.
இப்படத்தில் டிரைலர் வெளியாகி, தேர்த்திருவிழா, அடிபுள்ள, மற்றும் ஜலாலி ஆகிய இரண்டு சிங்கில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இப்படத்தின் 3 வது சிங்கில் அப்டேட் வெளியாகியுள்ளது.
அதன்படி, 1997ல் மறைந்த ஷாகுல் ஹமீது மற்றும் 2022 ஆம் ஆண்டு மறைந்த பம்பா பாக்கியாவின் குரல்களை செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மூலமாக லால் சலாம் படத்தின் திமிறி எழுடா என்ற பாடலில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பயன்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகிறது.