ஐஸ் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுவரும் இராணுவ விசேட அதிரடிப்படையின் முன்னாள் உறுப்பினர் ஒருவரை வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக் குண்டு ஒன்றுடன் கெக்கிராவ பொலிஸார் நேற்று (31 ) கைது செய்துள்ளனர்.
கெக்கிராவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் சுமித் முனசிங்கவிற்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றின் அடிப்படையில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கெக்கிராவ நிக்கினியாவ மீகஹவெவ வயல் பகுதியில் மறைந்திருந்த நிலையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவ்வேளையில் அவர் தனது ஜகெட் சட்டைப்பையில் மறைத்து வைத்திருந்த கைக்குண்டை எடுத்து பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது வீச முற்பட்டதாகவும்
பொலிஸார் புத்திசாதுர்யத்துடன் செயல்பட்டதனால் எவருக்கும் எவ்வித ஆபத்தும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.