யாழ்ப்பாணம் சங்குவேலி பகுதியில் வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடாத்தி, பல இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்களுக்கு நாசம் விளைவித்த குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் திங்கட்கிழமை (08) கைது செய்யப்பட்டுள்ளார்.
சங்குவேலியில் உள்ள வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்த கும்பலொன்று வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் , கதவுகள் என்பவற்றை உடைத்து சேதமாக்கி , வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுமார் 08 இலட்சம் ரூபாய் பெறுமதியான மோட்டார் சைக்கிளையும் தீயிட்டு கொளுத்தி , தப்பி சென்றுள்ள சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (07) இடம்பெற்றுள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வந்த பொலிஸார் , சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞன் ஒருவரை கைது செய்துள்ளதுடன் ஏனையவர்களையும் அடையாளம் கண்டுள்ள நிலையில் அவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.