படப்பிடிப்பு தளத்தில் ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்த விஜய்..!!

tubetamil
0

 GOAT படத்தின் படப்பிடிப்பு தளத்தில், ரசிகர்களுடன் நடிகர் விஜய் எடுத்த செல்ஃபி புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.


வெங்கட்பிரவு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும், GOAT படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


விஜய் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதால் அவரை பார்க்க ரசிகர்கள் குவிந்தனர். இதனையடுத்து ரசிகர்களை படப்பிடிப்புத் தளத்தின் உள்ளே இருந்து பார்த்து கையசைத்த நடிகர் விஜய், செல்ஃபி எடுத்துள்ளார்.


இந்த செல்ஃபியில், விஜய் மீசை இல்லாமல் வித்தியாசமான ஹேர் ஸ்டைலில் இருப்பதை பார்த்து அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.


ப்ரெண்ட்ஸ் படத்தின் இறுதி காட்சியில் மட்டும் தான் விஜய் வித்தியாசமாக ஹேர்ஸ்டைல் வைத்திருந்தார். அதன் பின்னர் பீஸ்ட், வாரிசு, லியோ படங்களில் கொஞ்சம் வித்தியாசம் காட்டியிருந்தார்.


இந்நிலையில், இப்போது வெளியான விஜய்யின் செல்ஃபியை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். அது மட்டும் இல்லாமல், படத்தில் நடிகர் விஜய்யின் கதாபாத்திரம் மீதான எதிர்ப்பார்ப்பும் அதிகமாகியுள்ளது.


மேலும், நடிகர் விஜய் இலங்கைக்கு படப்பிடிப்புகளுக்காக விஜயம் மேற்கொண்டிருப்பதாக தகவல் வைரலாகியுள்ளது. இலங்கையில் GOAT படத்தின் படப்பிடிப்பினை மேற்கொள்ள படக்குழு திட்டமிட்டிருந்த நிலையில் இலங்கையில் விஜய் இருப்பதாக கூறப்பட்டது.


எனினும், இந்த தகவல் இது வரை உறுதிப்படுத்தப்படவில்லை. இந்த நிலையில், தான் நடிகர் விஜய் சென்னை படப்பிடிப்பில் ரசிகர்களுடன் எடுத்த செல்ஃபி வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top