செழிப்பான தாவரங்களுக்கு மத்தியில் பல்லாயிரம் ஆண்டுகளாக மறைந்திருந்த பண்டைய பாரிய நகர் ஒன்று அமேசன் காட்டுக்குள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த கண்டுபிடிப்பு அமேசனில் வாழ்ந்த மக்கள் பற்றிய வரலாற்று புரிதலை மாற்றக்கூடியது என்று ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
வியக்கத்தக்க வகையிலான வீதிகள் மற்றும் கால்வாய் வலையமைப்பு மூலம் இணைக்கப்பட்டு வீடுகள் மற்றும் சந்தைத் தொகுதிகளைக் கொண்ட இந்த பண்டைய நகர் கிழக்கு ஈக்வடோரின் உபானா பகுதியில் அமைந்துள்ளது.
எரிமலை ஒன்றுக்குக் கீழ் அமைந்திருக்கும் இந்தப் பகுதி வளமான மண்ணை கொண்டிருந்தபோதும் அந்த எரிமலையே பண்டைய நகரின் அழிவுக்குக் காரணமாகி இருக்காலம் என்று நம்பப்படுகிறது.
சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்னர் நிறுவப்பட்டிருக்கும் இந்த நகரில் 1,000 ஆண்டுகள் வரை மக்கள் வாழ்ந்திருப்பதாக தொல்பொருள் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.