புதிய கல்விச் செயலாளராக நியமிக்கப்பட்ட
வசந்தா பெரேரா இன்று (01) கல்வி அமைச்சில் தனது கடமைகளை பொறுப்பேற்றார்.
பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பட்டதாரியான வசந்தா பெரேரா அவுஸ்திரேலியாவின் சிட்னி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் திட்ட முகாமைத்துவத்தில் முதுமாணிப் பட்டத்தையும், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவத்தில் முதுகலைப் டிப்ளோமாவையும், கொழும்பு பல்கலைக்கழகத்தில் பொருளாதார அபிவிருத்தியில் முதுகலைப் டிப்ளோமாவையும் பெற்றுள்ளார்.
முன்னதாக, வசந்தா பெரேரா நீதி, மின்சாரம் மற்றும் எரிசக்தி, சுகாதாரம் மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சுக்களில் செயலாளர் பதவிகளை வகித்தார்.
இதேவேளை, இவர் இலங்கை தூதரக சேவையில் சிரேஷ்ட இராஜதந்திர அதிகாரியாக பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.