பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சினால் ஸ்தாபிக்கப்பட்ட 118 அவசர தொலைபேசி இலக்கத்திற்கு வழங்கப்படும் தகவல்கள் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
அதன்படி, தேசிய பாதுகாப்பிற்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அச்சுறுத்தல் ஏற்படுத்தக்கூடிய பயங்கரவாத மற்றும் தீவிரவாத செயற்பாடுகளையும் இந்த இலக்கத்திற்கு வழங்க முடியும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அறிவித்துள்ளார்.
இவ்வாறு கிடைக்கப்பெறும் முறைப்பாடுகள் தனிக்குழுவொன்றினால் கண்காணிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, 118 அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பு மேற்கொண்டு பொய்யான தகவல்களை வழங்குபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளர்.