சுட்டுப்படு கொலை செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் அமரர்மகேஸ்வரனின் நினைவேந்தல் நிகழ்வு வட்டுக்கோட்டை தொகுதி ஐக்கிய தேசிய கட்சி அலுவலகத்தில்
கொழும்பில் வைத்து சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் தியாகராஜா மகேஸ்வரன் அவர்களது 16வது ஆண்டு நினைவேந்தல் நேற்றையதினம் வட்டுக்கோட்டை ஐக்கிய தேசியக் கட்சியின் அலுவலகத்தில், ஐக்கிய தேசியக் கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதி அமைப்பாளர் திரு.விஜிமருதன் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வின் ஆரம்பத்தில் இறைவழிபாடுகள் இடம்பெற்று தேவாரம் இசைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஈகைச் சுடரேற்றப்பட்டு, அன்னாரின் திருவுருவப் படத்திற்கு மலர்மாலை அணிவித்து மலர் தூவி நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது. பின்னர் மதகுருமாரின் ஆசியுரைகள் மற்றும் நினைவுப் பேருரைகள் என்பன இடம்பெற்றன. அத்துடன் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.