மலேசியாவை சேர்ந்தவர் எரிக்கா பைதுரி. பணக்கார பெண்ணான இவர் டிக்-டாக் தளத்தில் சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
அதில், மினி தியேட்டரின் 10 வரிசையில் உள்ள 16 சீட்களையும் முன்பதிவு செய்து தனி ஆளாக படம் பார்ப்பதுபோலும், தியேட்டரில் பாப்கார்ன் சாப்பிட்டுக் கொண்டு கண்ணாடி அணிந்திருந்த காட்சிகளும் அதில் பதிவாகி இருந்தன.
மேலும் அந்த வீடியோவில், நாங்கள் உள்முக சிந்தனை கொண்டவர்கள் (தனிமை விரும்பி) என்பதால் அனைத்து இருக்கைகளையும் வாங்கினோம் என தெரிவித்திருந்தார். இந்த வீடியோ வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அத்தோடு எரிக்கா பைதுரி தனது வசதியை காட்டிக் கொள்வதாக பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.