டி ராஜேந்தர் வீட்டிற்கு வந்த புதுவரவு குடும்பத்தினர் மகிழ்ச்சி..!!

tubetamil
0

 டி ராஜேந்தர் மருமகள் ஆண் குழந்தை பெற்றதை அடுத்து தங்கள் குடும்பத்திற்கு வந்த புது வரவை குடும்பத்தினர் மகிழ்ச்சியுடன் வரவேற்று உள்ளனர்.

டி ராஜேந்தர் இரண்டாவது மகன் குறளரசன் கடந்த 2019 ஆம் ஆண்டு நபிலா என்ற இஸ்லாமிய பெண்ணுடன் திருமணம் நடந்தது. இந்த நிலையில் டி ராஜேந்தர் மருமகள் நபீலா சமீபத்தில் கர்ப்பமான நிலையில் அவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன் ஆண் குழந்தை பிறந்தது.தாயும் சேயும் நலமாக இருப்பதை அடுத்து டி ராஜேந்தர் குடும்பத்தினர் தங்கள் வீட்டிற்கு வந்த புது வரவை மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர். ஏற்கனவே டி ராஜேந்தர் மகள் இலக்கியாவுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மகன் பிறந்ததால் டி ராஜேந்தர் தாத்தா ஆன நிலையில் தற்போது மீண்டும் தாத்தாவான சந்தோஷத்தை டி ராஜேந்தர் கொண்டாடி வருகிறார்.சிம்புவின் சகோதரரான குறளரசன், டி ராஜேந்தர் இயக்கிய சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். மேலும் தனது சகோதரர் சிம்பு நடித்த ‘இது நம்ம ஆளு’ திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.




Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top