சிவனொளிபாதமலை யாத்ரீகர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் இன்றைய போயா தினத்தில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படுவதாக நல்லதண்ணி பொலிஸார் அறிவித்துள்ளனர்.
ஆண்டின் முதல் போயா நாள் என்பதால், யாத்திரைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அவர்களில் பெரும்பாலானோர் ரயில்கள் மற்றும் பொதுப் போக்குவரத்து மூலம் வருவதால் தனியார் வாகனங்களின் பயன்பாடு கணிசமாகக் குறைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.