அண்மைக்காலமாக கொழும்பு துறைமுகத்தின் செயற்பாடுகள் சடுதியாக அதிகரித்துள்ளது.
ஜனவரி மாதத்தில் மட்டும் துறைமுகத்திற்கு வருகை தந்த சர்வதேச கப்பல்களின் எண்ணிக்கை 70 வீதத்தால் அதிகரித்துள்ளது.
செங்கடலில் நிலவும் மோதல்கள் காரணமாக கொழும்பு துறைமுகத்திற்கு வரும் கப்பல்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக இலங்கை துறைமுக அதிகார சபை தெரிவித்துள்ளது.
செங்கடலைச் சுற்றியுள்ள பாதுகாப்பற்ற சூழ்நிலை காரணமாக, கப்பல் நிறுவனங்கள் தங்கள் கப்பல் சேவைகளை கொழும்பு துறைமுகத்திற்கு பாதுகாப்பு நடவடிக்கையாக நகர்த்தியுள்ளனர்.
எனினும் இதன் காரணமாக நாளாந்தம் கொழும்பு துறைமுகத்திற்கு வரும் கப்பல்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
இவ்வாறுஇருக்கையில், நேற்றைய தினம் கொழும்பு துறைமுகத்தில் 24 கப்பல்கள் நங்கூரமிட்டிருந்த நிலையில், துறைமுகத்திற்கு வெளியே நங்கூரமிடுவதற்காக காத்திருந்த கப்பல்களின் எண்ணிக்கை 06 ஆக காணப்பட்டுள்ளன.