நாட்டில் தேயிலை பயிர்ச்செய்கைக்கு தேவையான உரங்களை கொழும்பு கொமர்ஷல் உர நிறுவனம் மற்றும் சிலோன் உர நிறுவனம் ஆகிய இரண்டு அரச உர நிறுவனங்களின் ஊடாக வழங்க விவசாய மற்றும் பெருந்தோட்ட
கைத்தொழில் அமைச்சு தீர்மானித்துள்ளது.
இதுவரை காலமும் இலங்கை தேயிலை சபையானது தேயிலை பயிரிடுவதற்கு தேவையான உரங்களை தனியாரிடம் கொள்வனவு செய்வதற்கு தேயிலை விவசாயிகளுக்கு கடனுதவி வழங்கியிருந்ததால் தேயிலை விவசாயிகள் அதிக விலையை செலுத்த வேண்டியிருந்தது.
சில தேயிலை உற்பத்தியாளர்கள் உரங்களை பயன்படுத்தாது பணத்தை வேறு தேவைகளுக்கு பயன்படுத்துவதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில், நாட்டில் தேயிலை பயிர்ச்செய்கைக்கான வருடாந்த உரத் தேவை 40,000 மெற்றிக் தொன்களாகும். அதற்காக செலவிடப்பட்ட தொகை சுமார் 6800 மில்லியன் ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.