யாழ்ப்பாணத்தில் இரண்டு காவல்துறை உத்தியோகத்தர்கள் மீது சில நபர்கள் இணைந்து சரமாரியாக தாக்குதல் நடத்திய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
ஆனைக்கோட்டை சந்தி மற்றும் குளப்பிட்டி சந்திக்கு இடைப்பட்ட பகுதியில் நேற்று (29) இரவு குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
மேலும் வீதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் குழுவாக நின்றவர்களை சோதனையிட இரண்டு காவல்துறை உத்தியோகத்தர்கள் முயன்றுள்ளனர். இதன்போதே காவல்துறை உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இத் தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் ஐந்து பேர் மானிப்பாய் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தாக்குதலுக்குள்ளான மானிப்பாய் காவல் நிலையத்தைச் சேர்ந்த இரு காவல்துறை உத்தியோகத்தரும் சங்கானை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மானிப்பாய் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.