வடக்கு தொடருந்து மார்க்கத்தின் மஹவ முதல் அநுராதபுரம் வரையிலான பகுதி இன்று முதல் 6 மாதங்களுக்கு மூடப்படவுள்ளதாக தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.
மஹவ முதல் அநுராதபுரம் வரையிலான தொடருந்து மார்க்கம் திருத்தப் பணிகள் காரணமாக மூடப்படவுள்ளதாக அந்த திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்திய கடன் உதவி திட்டத்தின் கீழ் இந்த அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.