இராணுவ பொறியியல் படையணியின் மேஜர் ஜெனரல் கே.ஏ.என். ரசிக்க குமார, ஊடக மற்றும் உளவியல் செயற்பாட்டு பணிப்பகத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக நேற்று (09) இராணுவத் தலைமையகத்தில் கடமைகளை பொறுப்பேற்றார்.
தற்போது பிரதம சமிக்ஞை அதிகாரியாகவும் இலங்கை சமிக்ஞைப் படையணியின் படைத் தளபதியாகவும் நியமிக்கப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் ஐ.எச்.எம்.ஆர்.கே. ஹேரத் இற்குப் பின் இப்பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேஜர் ஜெனரல் கே.ஏ.என். ரசிக்க குமார, சமய அனுஷ்டானங்களின் பின்னர் உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையெழுத்திட்டு கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
ஊடக மற்றும் உளவியல் செயற்பாட்டு பணிப்பகத்தின் புதிய பணிப்பாளர் சம்பிரதாயபூர்வமான, அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்கு உரையாற்றியதுடன், பணிப்பகத்திற்கான தனது எதிர்கால திட்டங்களை எடுத்துரைத்தார்.
தெல்தெனியவில் பிறந்த இவர் ருவன்வெல்ல ராஜசிங்க மத்திய கல்லூரியின் பெருமைக்குரியபழைய மாணவராவார்.அவர் 1990 இல் இலங்கை இராணுவத்தில் இணைந்து 1991 இல் பாகிஸ்தான் இராணுவ கல்வியற் கல்லூரியில் பயின்றுஇரண்டாம் லெப்டினனாக அதிகாரவாணை பெற்றார்.
அணி தலைவர் பாடநெறி, அதிகாரிகளின் தனிசிறப்பு பாடநெறி, படையணி புலனாய்வு அதிகாரி பாடநெறி, களப் பொறியியலளார் வகுப்பு III பாடநெறி,படையணி கணக்காளர் பாடநெறி, படையணி நிர்வாக அதிகாரி பாடநெறி, இராணுவக் கட்டளை மற்றும் பணிநிலை பாடநெறி, தேசிய பாதுகாப்பு கல்லூரி கற்கை (தேசிய பாதுகாப்பு மற்றும் மூலோபாய ஆய்வுகள்), இளம் அதிகாரிகள் பாடநெறி – இந்தியா, போர் பொறியியல் பயிற்றுவிப்பாளர் பாடநெறி – இந்தியா, இராணுவ கட்டளை மற்றும் பணிநிலை பாடநெறி – சீனா மற்றும் கண்ணி வெடி மற்றும் வெடி பொறியியல் பாடநெறி – சீனா. ஆகிய பல்வேறு பாடநெறிகளை பயின்றுள்ளார்.மேஜர் ஜெனரல் கே.ஏ.என் ரசிக்க குமார என்டிசீ பீஎஸ்சீ அவரது பணிக்காலத்தில், படைகட்டளையாளர், புலனாய்வு அதிகாரி, நிறைவேற்று அதிகாரி, பொறியியல் பிரிகேடின் பொதுப் பணிநிலை அதிகாரி III, உயர் அதிகாரி உதவியாளர், இலங்கை பொறியியல் படையணி தலைமையகத்தின் பொதுப் பணிநிலை அதிகாரி III, யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் பொதுப் பணிநிலை அதிகாரி II, 511 வது காலாட் பிரிகேடின் பிரிகேட் மேஜர், இராணுவ தலைமையகத்தின் இராணுவ பதவி நிலை பிரதானி அலுவலகத்தின் பணிநிலை அதிகாரி I, இராணுவ தலைமையகத்தின் இராணுவ செயலாளர் காரியாலய பணிநிலை அதிகாரி I,5,6 வது இலங்கை பொறியியல் படையணி கட்டளை அதிகாரி, இராணுவ தலைமையகத்தின் பொது பணிநிலை அதிகாரி I, வன்னி பாதுகாப்பு படை தலைமையகத்தின் பொது பணிநிலை அதிகாரி I (சொயற்பாடுகள்), 22 வது காலாட் படைப்பிரிவின் கேணல் பொதுப்பணி, பயிற்சி பணிப்பகத்தின் கேணல் பயிற்சி, இராணுவ தலைமையகத்தின் இராணுவ செயலாளர், 213 வது காலாட் பிரிகேட் பிரிகேட் தளபதி, வெளிநாட்டு நடவடிக்கைகள் பணிப்பக மற்றும் மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான சட்ட பணிப்பகத்தின் பணிப்பாளர் ஆகிய பதவிகளைவகித்துள்ளார்.
இந்நிகழ்வில் ஊடக மற்றும் உளவியல் செயல்பாட்டு பணிப்பகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.