அரச சேவையில் பதவி வெற்றிடங்கள்! விரைவில் வர்த்தமானி அறிவிப்பு

keerthi
0

 


கணக்காய்வு அதிகாரிகளுக்கான சுமார் 400 பதவி வெற்றிடங்கள் காணப்படுவதாக கணக்காய்வாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

கணக்காய்வு அதிகாரி பதவிக்கு பொருத்தமானவர்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படும் என கணக்காய்வாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, உரிய தகுதிகளுடன் தற்போது அரச சேவையில் ஈடுபட்டுள்ள பட்டதாரிகளிடமிருந்து இதற்கான விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளது.

இதற்கான வர்த்தமானி விரைவில் வௌியிடப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் கணக்காய்வு அதிகாரிகளுக்கான பதவி வெற்றிடங்கள் காரணமாக, கணக்காய்வு நடவடிக்கைகளை அதிகபட்ச முகாமைத்துவத்துடன் மேற்கொள்ள வேண்டியுள்ளதாக தெரிவித்துள்ளார்.  





Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top