டெங்கு நோய் தாக்கம் காரணமாக கொழும்பு பல்கலைக்கழக மாணவி ஒருவர் மரணமடைந்துள்ளார்.
கொழும்பு பல்கலைக்கழகத்தின் முதலாம் ஆண்டு மாணவியான ஹஸினி (23) என்பவரே உயிரிழந்துள்ளார்.
ஹொரணை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் அயந்தி ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.
தீவிர சிகிச்சை பிரிவுக்கு அனுமதிக்கப்படும் போது அவர், சுயநினைவை இழந்து விட்டதாக அவரது பெற்றோர் தெரிவித்தனர்.
அண்மையில் டெங்கு நோய் தாக்கத்திற்கு உள்ளான யாழ் பல்கலைக்கழக மாணவி ஒருவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.