இந்தோனேசியாவின் தலாவத் தீவு பகுதியில் இன்று (09.10.2024) காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
மேலும் இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்பு விபரங்கள் வெளியாகாத நிலையில் மக்களைப் பாதுகாப்பாக இருக்க அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில், இந்த நிலநடுக்கம் காரணமாக கட்டடங்கள், வீடுகள் குலுங்கியதால் மக்கள் வீதிகளில் தஞ்சமடைந்துள்ளனர்.