துணிவு படத்தின் வெற்றியை தொடர்ந்து அஜித் குமார், மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார்.
இந்த இப்படத்தின் ஷூட்டிங் முழுக்க முழுக்க வெளிநாட்டில் நடந்து வருகிறது. ஆக்ஷன் திரில்லராக உருவாகும் இப்படத்திற்கு திரிஷா, அர்ஜுன், ஆரவ் எனப் பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.இந்நிலையில் திரிஷா இந்தப் படத்தில் கயல் என்ற கேரக்டரில் நடித்து வருவதாக தகவல் கசிந்துள்ளது. தற்போது அஜித் -திரிஷா இடையிலான காம்பினேஷன் காட்சிகளை எடுக்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.
முன்னதாக விடாமுயற்சி படத்தில் அஜித்தின் கதாபாத்திரத்தின் பெயர் அர்ஜுன் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.