கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உயிரிழந்துள்ளார்.
கட்டுநாயக்க பகுதியிலிருந்து கொழும்பு நோக்கி இராஜாங்க அமைச்சர் பயணித்த வாகனம், அதே திசையில் பயணித்த லொறி ஒன்றின் பின்புறத்தில் மோதுண்டு விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த விபத்தில் காயமடைந்த இராஜாங்க அமைச்சர் உள்ளிட்ட சிலர் ராகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், இராஜாங்க அமைச்சர் மற்றும் பாதுகாப்பு பொலிஸ் அதிகாரி ஆகியோர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.