புதுவருட கடைமை செய்யற்பாடுகளை ஆரம்பிக்கும் சத்தியப் பிரமாண நிகழ்வு..!!

tubetamil
1 minute read
0

 2024ம் ஆண்டிற்கான  புதுவருடத்தின் கடைமை செய்யற்பாடுகளை ஆரம்பிக்கும் முதல் நாள் சத்தியப்பிரமாண நிகழ்வு கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று(01) காலை 9.00 மணிக்கு இடம்பெற்றது.


குறித்த நிகழ்வு கிளிநொச்சி மாவட்ட செயலக முன்றளில் மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன் தலைமையில், தேசியக் கொடியேற்றப்பட்டு ஆரம்பிக்கப்பட்டது.

தொடர்ந்து தேசத்திற்காக உயிர்நீத்த அனைவரையும் நினைவு கூரும்முகமாக அகவணக்க நிகழ்வு இடம்பெற்றது.

தொடர்ந்து, உத்தியோகத்தர்கள் அனைவரும் புதிய ஆண்டிற்கான தமது கடமைகளைப் பொறுப்பேற்கும் வகையில் கடைமை சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.

மேலும் மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன் அவர்கள் தற்போதைய சவால்களை வெற்றி கொள்வதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அரச கொள்கைகள் மற்றும் வேலைத் திட்டங்கள் தொடர்பாகவும், குறித்த குறிக்கோள்களை அடைவதற்கு அரச ஊழியர்களின் பங்களிப்பு தொடர்பாக உரையாற்றினார்.


புதிய ஆண்டினை வரவேற்று கடமைகளினை பொறுப்பேற்கும் சத்திய பிரமாண நிகழ்வில்  மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர்(காணி), மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், கிளைத் தலைவர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் அனைவரும் கலந்து கொண்டிருந்தனர்.


#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top