பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படும் பாதணி கொள்வனவுச் செய்வதற்கான இலவச வவுச்சர்களின் செல்லுபடியாகும் காலத்தை அரசாங்கம் நீடித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் உள்ள பாடசாலைகளில் கல்வி கற்கும் பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ள மாணவர்களுக்கு இந்த இலவச பாதணிகளைப் பெற்றுக் கொள்வதற்கான வவுச்சர்கள் வழங்கி வைக்கப்பட்டன.
எனினும் இதன் அடிப்படையில் குறித்த வவுச்சர்கள் செல்லுபடியாகும் காலத்தை அரசாங்கம் நீடித்துள்ளதாக கல்வி அமைச்சர் அறிவித்துள்ளது.
எதிர்வரும் பெப்ரவரி மாதம் 1ஆம் திகதியுடன் நிறைவடையும் வகையில் இந்த வவுச்சர்கள் வழங்கி வைக்கப்பட்டிருந்தன.
இவ்வாறுஇருக்கையில், எதிர்வரும் பெப்ரவரி மாதம் 17ஆம் திகதி வரை நிறைவடையும் காலத்தை நீடித்து கல்வி அமைச்சு விசேட அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.