சீனாவின் சனத்தொகையில் கடந்த ஆண்டில் மாத்திரம் 2.08 மில்லியன்கள் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டின் தேசிய புள்ளிவிபரவியல் பணியகம் தெரிவித்துள்ளது.
பிறப்பு வீதத்தில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியால் இந்நிலைமை ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அப்பணியகம் கடந்த ஆறு தசாப்த காலப்பகுதியில் 2022 ஆம் ஆண்டில் தான் சனத்தொகை வீழ்ச்சி முதன் முறையாகப் பதிவானதாகச் சுட்டிக்காட்டியுள்ளது.
2022 இல் 1.4118 பில்லியன்களாகக் காணப்பட்ட சனத்தொகை 2023 இல் 1.4097 பில்லியன்களுக்கு வீழ்ச்சியடைந்துள்ளது. இதன்படி கடந்த வருடத்தில் மாத்திரம் 2.08 மில்லியன்களால் பிறப்பு வீதத்தில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளும் ஆர்வத்தில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியினால் இந்நிலைமை ஏற்பட்டிருப்பதாக அந்தப் பணியகம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை இறப்புக்களின் எண்ணிக்கையிலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளன. அத்தோடு 65 வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை முதற்தடவையாக 14 வீதத்தை தாண்டியுள்ளது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.