மாம்பழ அறுவடையில் சாதனை..!!

tubetamil
0

 இலங்கையில் மாம்பழ அறுவடை இந்த ஆண்டு வரலாறு காணாத அளவில் அதிகரித்துள்ளதாக விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

2023ல் நீடித்த வறண்ட வானிலையும், அதைத் தொடர்ந்து பெய்த மழையும் மாம்பழ அறுவடையை அதிகரிக்கச் செய்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

விவசாயம் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, ​​நாடளாவிய ரீதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் மாம்பழங்கள் பயிரிடப்படுவதாகவும், குறிப்பாக ஏற்றுமதிக்காக பயிரிடப்படும் TEJC மாம்பழம், விலை குறைவினால் உற்பத்தி தடைப்படலாம் எனவும் அண்மையில் வலியுறுத்தப்பட்டது.

எனவே, மா பயிர்ச்செய்கையை மேலும் விரிவுபடுத்த வேண்டுமா என்பது குறித்த அறிவியல் அறிக்கையை தன்னிடம் வழங்குமாறு அமைச்சர் உத்தரவிட்டார்.

அறுவடைக்குப் பிந்தைய தொழில்நுட்பக்கழக தரவுகளின்படி, இந்நாட்டில் விளையும் அனைத்து வகையான மாம்பழங்களின் வருடாந்த அறுவடை சுமார் 250 மில்லியன் பழங்கள் ஆகும்.

எவ்வாறாயினும், 2023-24 மாம்பழ பருவம் அந்த அளவைத் தாண்டியுள்ளதாக தற்போதைய தரவு உறுதிப்படுத்தியுள்ளது என்று திணைக்களம் கூறுகிறது.

இதன் காரணமாக ரூ.800 முதல்1000 வரை விலை போன 1 கிலோகிராம் TEJC மாம்பழம் தற்போது ரூ. 400 முதல் 500 ரூபாய்  வரை குறைந்துள்ளதாக விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top