குறைந்த வருமானம் கொண்ட மக்ளுக்கு நிதி அமைச்சின் அறிவிப்பு

keerthi
0


 குறைந்த வருமானம்  கொண்ட  மக்களுக்கு வழங்கப்படும் அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு பெறும் குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

இதன்படி, மேலதிகமாக 3 இலட்சம் குடும்பங்களை அஸ்வெசும திட்டத்திற்குள் உள்வாங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு குறித்த மேன்முறையீடுகளை பரிசீலித்ததையடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பதில் நிதி அமைச்சர் செஹான் சேமசிங்க மேலும் தெரிவித்தார்.

7 இலட்சம் முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை பரிசீலித்து, 300,000 கூடுதல் குடும்பங்கள் அஸ்வெசும சமூக நலத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.

இதன்படி, அஸ்வெசும திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ள குடும்பங்களின் எண்ணிக்கை 17 இலட்சத்தை தாண்டியுள்ளதாக பதில் நிதியமைச்சர் செஹான் சேமசிங்க சுட்டிக்காட்டினார். 



Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top