மேல் மாகாண - வடக்கிற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா
அதிபர் ரொஹான் பிரேமரத்ன, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் இதற்கு முன்னர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக கடமையாற்றிய காலத்தில் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு பொறுப்பான பணிப்பாளராக கடமையாற்றியுள்ளார்.
கனேமுல்ல சஞ்சீவ உட்பட பல ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளை விசாரணை செய்த பொலிஸ் அதிகாரியாக ரொஹான் பிரேமரத்ன பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.