இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
அணிசேரா மாநாட்டுக்காக உகண்டாவின் தலைநகர் கம்பாலாவில் தங்கியுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நேற்றுமுன்தினம் பிற்பகல் 3 மணியளவில் சிறீதரனுக்கு தொலைபேசி அழைப்பெடுத்து வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.