அதிக வரையறைகளை விதிக்கும், தெளிவற்ற சட்டங்கள் மூலம் இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி பாதிக்கப்படும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.
அவை முதலீடுகளையும் டிஜிட்டல் பொருளாதார அபிவிருத்தியையும் பாதிக்கும் எனவும் அவர் முன்னெச்சரிக்கை விடுத்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இணையவழி பாதுகாப்பு சட்டமூலம் தொடர்பில் சமூக வலைத்தளத்தில் அவர் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
இந்த சட்டத்திருத்தம் மூலம் கருத்து சுதந்திரம், புத்தாக்கம் மற்றும் தனியுரிமைக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதாகவும் சிவில் சமூகமும் தொழில்நுட்ப நிறுவனங்களும் அடங்கலாக பிரதான தரப்பினர் முன்வைத்த முக்கிய விடயங்கள் உள்வாங்கப்படவில்லையெனவும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர்
ஜூலி சங் தெரிவித்துள்ளார்.