வவுனியா - திருகோணமலை பிரதான வீதியில் வயோதிபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
வவுனியா, திருகோணமலை பிரதான வீதியின் வவுனியா எல்லைப் புறமாக ஹெப்பற்றிக்கொல்லாவ பகுதியிலேயே இந்தச் சடலம் நேற்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
60 வயது மதிக்கத்தக்க இந்த வயோதிபர் விபத்தின் காரணமாகவே உயிரிழந்துள்ளார் எனவும், விபத்தை ஏற்படுத்திய வாகனம் தப்பிச் சென்றுள்ளது எனவும், விபத்தை ஏற்படுத்தியவர்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.