இவரா அடுத்த பிரதமர்?: சர்ப்ரைசாக அறிவித்த பிரான்ஸ் அதிபர்

keerthi
0

 


பிரான்ஸ் நாட்டின் அதிபராக இம்மானுவல் மேக்ரான் இரண்டாவது முறையாக பதவியேற்றார். 

அத்தோடு     பிரான்ஸ் அரசு கொண்டு வந்த ஓய்வூதிய கொள்கைகள், குடியேற்ற சட்டங்கள் ஆகியவற்றை எதிர்த்து இம்மானுவல் மேக்ரானுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. இடைத்தேர்தல்களில் தோல்வி அடைந்த மேக்ரான் அரசு, பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்தது.

பிரான்ஸ் நாட்டின் அமைச்சரவையில் மாற்றம் கொண்டு வர அதிபர் இம்மானுவல் மேக்ரான் திட்டமிட்டுள்ளார்.

இதற்கிடையே, அந்நாட்டின் பிரதமராக இருந்த 62 வயதான எலிசபெத் போர்ன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இவ்வாறுஇருக்கையில், பிரான்ஸ் நாட்டின் அடுத்த பிரதமராக 34 வயதான அந்நாட்டின் கல்வி மந்திரி கேப்ரியல் அட்டல் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கேப்ரியல் அட்டல் தன்னை ஒரு ஓரினச் சேர்க்கையாளர் என வெளிப்படையாக அறிவித்தவர் ஆவர்.

பிரான்ஸ் வரலாற்றில் மிகக் குறைந்த வயதில் பிரதமர் பதவிக்கு நியமிக்கப்பட்டவர் என்ற சிறப்பையும், பிரதமராக பதவியேற்கும் முதல் தன்பாலின ஈர்ப்பாளர் என்ற சிறப்பையும் காப்ரியல் அட்டல் பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top