வவுனியா சிதம்பரபுரம் பகுதியில் போதைப்பொருள் வைத்திருந்த சந்தேகத்தின் அடிப்படையில் காதல் ஜோடியொன்று பொலிஸாரிடம் சிக்கியுள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சிதம்பரபுரம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்ட போது அங்கு தங்கி இருந்த காதல் ஜோடியிடம் கஞ்சா மற்றும் தொலைபேசியினுள் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் ஐஸ் போதைப் பொருளும் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் இன்றைய தினம் (03) நீதிமன்றத்தில் காதலர்கள் இருவரும் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.